சில நேரங்களில் சில மனிதர்கள்

வணக்கம். நீண்ட இடைவெளிக்கு பிறகு சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இவ்வலைப்பதிவு எனது நீண்ட நாள் ஆசை.   ஹாரி பாட்டர் எனக்கு பிடித்த தொடர் கதை. அதில் “ஹார்கர்க்ஸ்” என்ற கருத்து உள்ளது. அதாவது, ஒருவன் தனது ஆத்மாவை பாகங்களாய் பிரித்து,  பல பொருட்களில் அதை புதைப்பதன் மூலம் , அவனது மேனி வெறும் காற்று அடைத்த, ரத்தம் சுரக்கும் இயந்திரம் ஆகிறது. இதன் மூலம், அம்மேனியை அழித்தால் கூட அவன் ஆத்மா அழிவதில்லை. சாகாவரம் பெறுகிறான். … More சில நேரங்களில் சில மனிதர்கள்

e4!

    “Hello Everyone!” Didn’t get any good night sleep. So I thought Why not a good post? Atleast a post, it need not be essentially good as one might hope it would be, but I will try to keep the philosophical dosage a bit low owing to my sleep deprived state. Many a times … More e4!

கண்ணம்மா

உன் விழிகள் விழுங்கியதே கண்ணம்மா என் ஆறடி உயரத்தை ஓர் சிமிட்டலில், மதி கெட்டுத் திறிகிறேனே கண்ணம்மா உன் புன்முறுவல் கண்ட நொடி முதல், கரைந்து விடுகிறேன் கண்ணம்மா உன் ஸ்வாச காற்றின் வருடலில். முயன்று தோற்கிறேனே கண்ணம்மா உன் இதயத்தில் ஓர் இடம் பிடிக்க… Hari 🙂

பாகுபலி!

மேனியில் பாய்ந்த அம்புகள் தன் உயிரைப் பருகும்முன், அவன் அழுகுரல் நிறுத்த புஷ்கரனை துணைக்கு அழைத்தாள். துரத்திய துஷ்டர்களின் விடாமுயற்சிக்கு தன்மேனியில் இருந்த அம்பால் குருதி வழிய அனுப்பிவைத்தாள் அப்பராமேஸ்வரனுக்கு அன்பளிப்பாக. பாறைகளை விழுங்கும் அவ்ஆற்றில் பாவங்களைக் கரைக்க முனைந்தாள் கையில் அவனை ஏந்தியே! பசியில் தவிக்கும் அவ்வாற்றிற்கு இவளே அன்றைய உணவு! ஒளிரும் அவன்கண்கள் மூடாவிருக்க, ஒலிக்கும் அவன்குரல் ஓயாவிருக்க, ஏந்தினாலே அவனை அன்று அவ்வாசுதேவன் ஏந்தியது போல் தன் தலையின் மீது. கானகத்தைப் பிளக்கும் அவ்வாற்றிற்குத் தெரியாது அது தங்கிச்செல்வது ஓர் யுகபுருஷனென்று. மகனை ஏந்தத் தவிக்கும் சங்காவிற்கு இக்கானகம் பெற்றுத்தந்தது ஓர்புதலவனை மிதக்கும் அம்மங்கை வாயிலாக! மணிக்கட்டு வரை மூழ்கிய அவளோ ஏந்திய செல்வனை ஈன்றாள் சங்காவிற்கு கரையா பாவங்களை கரைத்தால் அவாற்றிலே உயிர்நீத்து தன்பங்கிற்கு. அச்சங்காவோ அன்று அறியாதது இக்குறுநகை தெறிக்கும் குழந்தைக்கோ காத்திருப்பது ஓர் அரியணை என்று….

தாயம். 

மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி !! ஒரு மூன்று மாதங்களாக ஓய்வினால் களைப்படைந்து மீண்டும் புத்துணர்ச்சி பெற்று வருகையில் மிக மகிழ்ச்சி. தாயம். ஆகா! அதை பார்க்கும் பொழுது மனதில் ஏற்படும் சந்தோஷத்திற்கு எல்லை இல்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியை வெறித்தனமாக பார்ப்பதை நிறுத்தி ஒரு மாதம் ஆகிறது. எனினும் இன்று அந்த நிகழ்ச்சியை மீண்டும் பார்த்துக்கொண்டு இருக்கையில் அவர்கள் லூடோ விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தனர். கடித்த தோசையின் முறுவல் மூலையில் தகதிமிதா போட்டுக்கொண்டிருந்தது. திடீர் என்று திரையில் … More தாயம்.